வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூஜையில் மூவருடன் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்று வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் வழிபாட்டு தலங்களில் ஒன்று கூடுவதற்கு தடை விதிப்பது குறித்து இன்று வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதாரத் துறையினர் மேலும் தெரிவிக்கையில் ,
‘அரச சுற்றறிக்கையில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மூவருடன் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது அரச சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. அத்துடன் இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது. பொதுமக்கள் ஆலய வழிபாடுகளில் அதனையும் மீறி ஒன்று கூடினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
- தப்பிக்க வழி தேடும் இலங்கை அரசும், காப்பாற்ற காரணம் தேடும் தமிழர் தரப்பும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா