அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை சீனத் தலை நகர் பெய்ஜிங் சென்றடந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ எனும் அரச கட்டடத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான வரவேற்பு விழாவின் பின், அங்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரை ஆற்றுகையில், ஷி ஜின்பிங்கை சந்திப்பது “ஒரு கௌரவம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் “நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே இருந்து வந்திருக்கிறோம், இடையில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தபோது, அவற்றை நாம் பேசித் தீர்த்துக்கொண்டோம். நான் உங்களை அழைப்பேன், நீங்களும் என்னை அழைப்பீர்கள், பலருக்கும் இது தெரியாது; நமக்கு எப்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், அதை நாம் மிக விரைவாகத் தீர்த்துவிடுவோம்.”
“நான் அனைவரிடமும் இதை சொல்வதுண்டு: நீங்கள் ஒரு சிறந்த தலைவர்,” என்று டிரம்ப் கூறினார்.



