செம்மணி விவகாரம் – மனோ கணேசன் கருத்து

வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணி விவகாரத்துக்கு நேர்ந்தது என்ன, வடக்கில் காணாமல் போனோர் விவாகரத்துக்கு பிரதான தீர்வாக,செம்மணி விவகாரம் தொடர்பில் கைதி, முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தீர்வுகளை தேட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

பயிரிட படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாக, தேசிய மக்கள் சக்தி  கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இன்று அந்த காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது மோசமான துரோகம். இதை உடன் நிறுத்தி, தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்கும் ‘மலையக வாழ்வாதார காணி கொள்கையை’ அறிவிக்க வேண்டும்  எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.