யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் விகாரை அமைந்துள்ள இடத்தில் புதிதாக நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கந்தரோடை பௌத்த தொல்லியல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகத் தனக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, தான் நேரில் சென்று பார்வையிட்டதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த பகுதிக்கு கடந்த மாதம் 31 ஆம் திகதி தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட பௌத்தர்கள் புத்தர் சிலையினை அங்கு வைத்து வழிபாடுகளை மேற்கொள்வதுடன் , “பிரித்” ஓதி சமய சடங்குகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பங்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



