ஜனாதிபதி நாடு திரும்பியதும் கூட்டமைப்புடன் பேசுவார்: அமைச்சர் பீரிஸ்

பச்சலெட்டின் அறிக்கையை நிராகரித்து பீரிஸ் உரை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று இராஜதந்திர வட்டாரங்களிடம் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோ நகரில் நடக்கும் காலநிலை மாநட்டில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் கூட்டமைப்புடன் பேசுவார் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரிடமும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சு குறித்து அண்மையில் சந்தித்த உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் வினவியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவ்வாறு ஓர் அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி சந்திப்பு ஜூன் 16இற்கு திகதியிடப்பட்டிருந்தது. ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து பஸில் ராஜபக்ஷ அமைச்சு பொறுப்பேற்ற பின்னர் பேச்சு நடக்கும் என்று உறுதியளித்தபோதும் பேச்சுக்கள் எவையும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad ஜனாதிபதி நாடு திரும்பியதும் கூட்டமைப்புடன் பேசுவார்: அமைச்சர் பீரிஸ்