இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

450 Views

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால்,  கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தோனேஷியாவின்  மெளமரே அருகே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இது வரையில் தகவல்கள் வெளிவரவில்லை. ஆனாலும் சக்திவாய்ந்த நில நடுக்கம் என்பதால் பாதிப்புக்கள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றன.

முன்னதாக, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர். 26-ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Leave a Reply