அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்!

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் காலமானார்.

சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசியம், தமிழ் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட இவர், புவிசார் அரசியல், உலகளாவிய அரசியல் போக்குகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான மிகவும் சிக்கலான விடயங்களைச் சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் தனது எழுத்துக்கள் மற்றும் கருத்துரைகள் மூலம் எடுத்துரைக்கும் அசாத்திய திறனைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களும் தமிழ் தேசமும் எதிர்கொண்ட பெரும் ஆபத்துகளையும், எதிர்காலத்தில் வரவிருந்த அரசியல் அபாயங்களையும் முன்னறிந்து எச்சரிக்கும் ஆற்றல் கொண்ட சிந்தனையாளராக இவர் திகழ்ந்தார்.