தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் காவல்துறையினர்

261 Views

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு  வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் படகு மூலம் அகதி போன்று பலா் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply