திலீபன் நினைவுத்தூபி முன்பாக காவல்துறை அராஜகம்; அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன் கைது

620 Views

09 2 திலீபன் நினைவுத்தூபி முன்பாக காவல்துறை அராஜகம்; அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன் கைதுயாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் தினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன் கைது. தியாக தீபம் திலிபனின் தினைவுத் தூபிக்கு முன்பாக  இன்று பிற்பகல் அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது பொலிஸார் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

இதன்போது முன்னணியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் பொலிஸாரால் காலால் உதைக்கப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து வெள்ளை வான் ஒன்றில் பொலிஸார் அவரைக் கைது செய்து பலவந்தமாக அழைத்துச் சென்றனர்.

8 7 திலீபன் நினைவுத்தூபி முன்பாக காவல்துறை அராஜகம்; அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன் கைதுஅவருடன் இணைந்திருந்த 2 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது முன்னணியின் பெண் உறுப்பினர்கள் பலரும் பொலிஸாரால் தாக்கப்பட்டனர்.

10 1 1 திலீபன் நினைவுத்தூபி முன்பாக காவல்துறை அராஜகம்; அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன் கைது

Leave a Reply