பிள்ளையானையும் கருணாவையும் போல அர்ச்சுனாவும் உள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவிப்பு

தமிழ் மக்களின் உரிமைக்காக 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகின.

அத்துடன் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று (15) நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

இதன்படி, தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நினைவேந்தலின் ஆரம்பமாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தின் முதலாவது நாள் நினைவேந்தல் நிகழ்வு, இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 அளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம் மற்றும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் வவுனியா பொங்கு தமிழ் தூபியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

அதேநேரம், தியாகத் தீபத்தின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் இன்று (15) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது தீபச்சுடர் ஏற்றப்பட்டு, உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கொண்டனர்.