வங்கதேச தலைநகர் டாக்காவில் மாணவர் போராட்டத்தின்போது வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் ஹேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலைநகர் டாக்காவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் திகதி டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதுமுதல் அவர் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் – 2 இன்று (செவ்வாய்கிழமை) மரண தண்டனை விதித்துள்ளது.



