புதிய அரசாங்கத்தில் இன்று அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுள்னர்.அத்துடன் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களின் நியமனமும் இடம்பெற்றுள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதும்,மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டும் இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை.
மட்டக்களப்புக்கு பிள்ளையானை அபிவிருத்திக்கு குழு தலைவராக நியமிப்பதற்காகவே அந்த இடம் விடப்பட்டுள்ளதாகவும் பிள்ளையான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சு பதவியும் பிள்ளையனுக்கு கிடைக்கலாம் என அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிறையிலிருக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக,அமைச்சராக பதவிவகிப்பதுஇராசபக்சக்களின் அரசாங்கத்தில் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் நோக்கர்கள்.