சிறிலங்காவில் இன்று அமைச்சுக்கள்,இராஜங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டு அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில்;தமிழ்,முஸ்லீம் மக்களுக்கு பேளரவிலாவது பணியாற்றிய அமைச்சுக்கள்/இராஜங்க அமைச்சுக்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.
புத்த சாசன அமைச்சு முன்னிலைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்து விவகார,முஸ்லீம் விவகார அமைச்சுக்களை நீக்கப்பட்டுள்ளன.தமிழ் மொழி அமுலாக்கத்துக்காக இருந்த அரசகரும மொழிகள் அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையை வெளிப்படையாகவே எதிர்த்துவரும் சரத் வீரசேகராவிற்கு மாகாண சபைகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது .
சிங்கள-பௌத்த இனவாதத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது
ராஜபக்சக்களின் அரசு.