ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (12) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது.
புதிய அமைச்சரவையில் பிரதமர் உட்பட 25 பேர் அங்கம் வகிக்கின்றனர். இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 39 ஆகும். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களாக 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து புதிய அமைச்சரவை மற்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஆசிர்வதித்தனர். மாவட்ட குழு தலைவர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி அவர்களினால் முதலில் வழங்கி வைக்கப்பட்டது.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் விபரம் பின்வருமாறு:
01.மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு அமைச்சு
02. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
03. கௌரவ நிமல் சிறிபால டி சில்வா தொழில் அமைச்சு
04. கௌரவ ஜீ.எல்.பீரிஸ் கல்வி அமைச்சு
05. கௌரவ பவித்ரா தேவி வன்னியாரச்சி சுகாதார அமைச்சு
06. கௌரவ தினேஷ் குணவர்த்தன வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
07. கௌரவ டக்ளஸ் தேவானந்த கடற்றொழில் அமைச்சு
08. கௌரவ காமினி லொக்குகே போக்குவரத்து அமைச்சு
09. கௌரவ பந்துல குணவர்த்தன வர்த்தக அமைச்சு
10. கௌரவ ஆர்.எம்.சி.பீ. ரத்னாயக்க வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு
11. கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
12. கௌரவ கெஹலிய ரம்புக்வெல்லை வெகுசன ஊடக அமைச்சு
13. கௌரவ சமல் ராஜபக்ஷ நீர்ப்பாசன அமைச்சு
14. கௌரவ டலஸ் அழகப்பெரும மின்சக்தி அமைச்சு
15. கௌரவ ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைகள் அமைச்சு
16. கௌரவ விமல் வீரவன்ஸ கைத்தொழில் அமைச்சு
17. கௌரவ மஹிந்த அமரவீர சுற்றாடல் அமைச்சு
18. கௌரவ எஸ்.எம். சந்திரசேன காணி அமைச்சு
19. கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே கமத்தொழில் அமைச்சு
20. கௌரவ வாசுதேச நாணயக்கார நீர்வழங்கல் அமைச்சு
21. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில வலுசக்தி அமைச்சு
22. கௌரவ ரமேஷ் பத்திரண பெருந்தோட்டத்துறை அமைச்சு
23. கௌரவ பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அமைச்சு
24. கௌரவ ரோஹித அபேகுணவர்த்தன துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு
25. கௌரவ நாமல் ராஜபக்ஷ இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
26. கௌரவ அலி சப்ரி நீதி அமைச்சு
புதிய இராஜாங்க அமைச்சர்கள்
01. கௌரவ சமல் ராஜபக்ஷ உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
02. கௌரவ பிரியங்கர ஜயரத்ன வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்
03. கௌரவ துமிந்த திஸாநாயக்க சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி
04. கௌரவ தயாசிறி ஜயசேக்கர பத்திக், கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள்
05. கௌரவ லசந்த அழகியவன்ன கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு
06. கௌரவ சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு
07. கௌரவ அருந்திக்க பெர்னாண்டோ தென்னை, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்
08. கௌரவ நிமல் லன்சா கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
09. கௌரவ ஜயந்த சமரவீர களஞ்சிய வசதிகள், கொல்களன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப்படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி
10. கௌரவ ரொஷான் ரணசிங்க காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச வியாபார காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி
11. கௌரவ கனக ஹேரத் கம்பனித் தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு
12. கௌரவ விதுர விக்ரமநாயக்க தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள்
13. கௌரவ ஜானக்க வக்கும்புர கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு
14. கௌரவ விஜித பேருகொட அறநெறிப் பாடசாலைகள், பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள்
15. கௌரவ ஷெஹான் சேமசிங்க சமுர்த்தி, மனைப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், தொழில் அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி
16. கௌரவ மொஹான் டி சில்வா பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள், இரசாயண பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல்
17. கௌரவ லொஹான் ரத்வத்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார் கைத்தொழில்கள்
18. கௌரவ திலும் அமுனுகம வாகனங்களை ஒழுங்குபடுத்தல்,பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்
19. கௌரவ விமலவீர திஸாநாயக வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி
20. கௌரவ தாரக பாலசூரிய பிராந்திய உறவு அலுவல்கள்
21. கௌரவ இந்திக்க அநுருத்த கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு
22. கௌரவ கஞ்சன விஜேசேக்கர அழகு மீன்கள், நன்னீர் மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி, ஆழ்கடல் பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி
23. கௌரவ சனத் நிஷாந்த கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி
24. கௌரவ சிறிபால கம்லத் மகாவலி வலயங்கள் சார்ந்த அகழிகள், வாய்க்கால்கள் மற்றும் வாழ்விடங்கள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
25. கௌரவ சரத் வீரசேக்கர மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள்
26. கௌரவ அநுராத ஜயரத்ன கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள், நீர்த்தேங்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி
27. கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர்கள் தொழில் அபிவிருத்தி
28. கௌரவ தேனுக விதான கமகே கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு
29. கௌரவ சிசிர ஜயக்கொடி சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதாரம்
30. கௌரவ பியல் நிஷாந்த டி சில்வா மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள்
31. கௌரவ பிரசன்ன ரணவீர பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள் , மரப்பாண்டங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடு
32. கௌரவ டீ .வீ. சானக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி
33. கௌரவ டீ.பீ.ஹேரத் கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள்
34. கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில்
35. கௌரவ நாலக்க கொடஹேவா நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருட்கள் அகற்றுதல் மற்றும் சமுதாய துப்பரவேற்பாட்டு அலுவல்கள்
36. கௌரவ ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்
37. கௌரவ அஜித் நிவாட் கப்ரால் நிதி மற்றும் மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்தம்
38. கௌரவ சீதா அரம்பேபொல திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல்
39. கௌரவ சன்ன ஜயசுமன மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்
மாவட்டக் குழு தலைவர்கள்
01. திரு. பிரதீப் உதுகொட கொழும்பு மாவட்டம்
02. திரு. சஹன் பிரதீப் விதான கம்பஹா மாவட்டம்
03. திரு. சஞ்சீவ எதிரிமான்ன களுத்துறை மாவட்டம்
04. திரு. வசந்த யாபா பண்டார கண்டி மாவட்டம்
05. திரு. என். நாலக பண்டார கோட்டேகொட மாத்தளை மாவட்டம்
06. திரு. எஸ்.பீ. திஸாநாயக நுவரெலியா மாவட்டம்
07. திரு. சம்பத் அதுகோரள காலி மாவட்டம்
08. திரு. நிபுன ரணவக்க மாத்தறை மாவட்டம்
09. திரு. உபுல் கலப்பத்தி ஹம்பாந்தோட்டை மாவட்டம்
10. திரு. அங்கஜன் ராமநாதன் யாழ்ப்பாண மாவட்டம்
11. திரு. டக்லஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டம்
12. திரு. கே.திலீபன் வவுனியா மாவட்டம்
13. திரு. கே. காதர் மஸ்தான் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள்
14. திரு. டீ . வீரசிங்க அம்பாறை மாவட்டம்
15. திரு. கபில அதுகோரளை திருகோணமலை மாவட்டம்
16. திரு. குணபால ரத்னசேக்கர குருணாகல் மாவட்டம்
17. திரு. அசோக பிரியன்த
புத்தளம் மாவட்டம்
18. திரு. எச். நந்தனசேன அநுராதபுரம் மாவட்டம்
19. திரு. அமரகீர்த்தி அதுகோரளை பொலன்னறுவை மாவட்டம்
20. திரு. சுதர்ஷன தெனிபிடிய பதுளை மாவட்டம்
21. திரு. குமாரசிறி ரத்நாயக மொணராகலை மாவட்டம்
22. திரு. அகில எல்லாவல இரத்தினபுரி மாவட்டம்
23. திருமதி ராஜிகா விக்ரமசிங்க கேகாலை மாவட்டம்