கோட்டா அரசுக்கு எதிராக தெல்லிப்பளையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தெல்லிப்பளையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 04 11 at 12.54.04 PM கோட்டா அரசுக்கு எதிராக தெல்லிப்பளையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இந்நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வலி வடக்கு மக்களால் இப்போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் இன்று (11)    முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்கள் எங்கே, வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.