உக்ரைனின் புச்சா பகுதியில் கொலை செய்யப்பட்ட மக்கள் –  இந்தியா கண்டனம்

437 Views

புச்சா பகுதியில் கொலை செய்யப் பட்ட மக்கள்

புச்சா பகுதியில் கொலை செய்யப் பட்ட மக்கள்

உக்ரைனின் புச்சா பகுதியில் நடந்த மக்கள் கொலைகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா நெருக்கடி குறித்து இன்று  பாராளுமன்றத்தில் பேசிய இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், ” உக்ரைன் – ரஷ்யா நெருக்கடிக்கு எதிராக முதலாவதாகவும் வலுவானதாகவும் வினையாற்றிய முதல் நாடு இந்தியா. இரத்தம் சிந்துவது மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் மூலம் எந்தவித தீர்வையும் எட்ட முடியாது என, நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும்.

இந்த விவகாரத்தில் இந்தியா ஒரு சார்பை தேர்ந்தெடுத்தால், அது அமைதியின் சார்பாகத்தான் இருக்கும். இதுதான் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply