இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம்: மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

408 Views

மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில்  ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் பெண்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பினால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்து  மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி பெண்கள் ஒன்றியத்தினால் குறித்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

277729736 3238293046496010 8845959215400849520 n இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம்: மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலை அதிகரிப்பினால் வடக்கு கிழக்கில் பெண்கள் எதிர்நோக்கிவரும் நெருக்கடிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் எரிவாயு விலையேற்றம் பால்மா மற்றும் எரிபொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலையேற்றத்தினால் தினமும் பெண்கள் பாதிக்கப்படுவது குறித்தான கண்டன கோசங்களும் எழுப்பப்பட்டன.

Leave a Reply