மருந்து விநியோக நெருக்கடியால் சுகாதாரத் துறை முடங்கியுள்ளது -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

351 Views

சுகாதாரத் துறை முடங்கியுள்ளது

சுகாதாரத் துறை முடங்கியுள்ளது

மருந்து தட்டுப்பாடு காரணமாக சுகாதாரத்துறை அடுத்த சில வாரங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்மறையான நிதி முறைமையினால் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமேல் மாகாண இணைப்பாளரான வைத்தியர் இந்திக ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் டொலரின் பற்றாக்குறையே மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்படுவதுடன், மருந்துகளுக்கு அதிக தேவை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Leave a Reply