கடந்த ஏழாண்டுகளில் 881,254 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்

431 Views

இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்

கடந்த ஏழாண்டுகளில் 881,254 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர் என உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பாராளுமன்ற மக்களவையில்   சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, 2019ஆம் ஆண்டில் அதிகமானோர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டனர் என்றும் அந்த ஆண்டில் மட்டும் 144,017 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் 85,242 பேராகப் பதிவான அந்த எண்ணிக்கை, இவ்வாண்டில் மீண்டும் உயர்ந்தது என்றும்  நடப்பாண்டு 2021 செப்டம்பர் 30ஆம்  திகதி வரை 111,287 பேர் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad கடந்த ஏழாண்டுகளில் 881,254 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்

Leave a Reply