“உலகின் பலநாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிவிட்டது, இதுவரை 70 நாடுகளுக்களும் அதிகமாக பரவியுள்ளது. லேசான பாதிப்புதான் இருக்கும் என்று யாரும் எளிதாக நினைக்க வேண்டாம்” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒமைக்ரான் வைரஸ் உலகின் பலநாடுகளுக்குப் பரவிவிட்டது. தற்போது உலகளவில் 77 நாடுகளுக்குப் பரவிவிட்டது, உண்மையில் இன்னும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் பரவல் இருக்க வேண்டும், அது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்.
இதற்கு முன் நாங்கள் பார்த்திராத வகையில், ஒமைக்ரான் வைரஸ், பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. உலக மக்கள் ஒமைக்ரான் வைரஸ், பாதிப்பு லேசானதாக இருக்கும் என உதாசினப்படுப்படுத்துகிறார்கள் என்பது கவலையாக இருக்கிறது.
உறுதியாகச் சொல்கிறோம், எங்களுக்குத் தெரிந்தவரையில், இந்த வைரஸ் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். ஒமைக்ரானால் உடல்நலப் பாதிப்பு குறைவாக இருந்தாலும், அதன்பரவல் நோயால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து நாட்டின் சுகாதார அமைப்புமுறையேயே செயலிழக்கச் செய்துவிடும்” என மேலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.