எரிபொருளுக்காக பருத்தித்துறையில் இன்றும் மக்கள் காத்திருப்பு

217 Views

எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சீரடையாத நிலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சீரடையாத நிலையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இன்றும் (29) மண்ணெண்ணெய்க்காக மக்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எங்கும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. பருத்தித்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவ்வப்போதே மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (29) காலை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என தெரியவந்தது.

இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போது குடும்ப அட்டை ஒன்றிற்கு 250 ரூபாவிற்கான (3 லீட்டருக்கு குறைவு) மண்ணெண்ணெய் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.

நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த மக்கள் இதனால் அதிருப்தியடைந்திருந்தனர். மின் தடை நேரத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதில்லை என்பதால் மீண்டும் மின் வழங்கல் கிடைக்கும் வரை மக்கள் காத்திருந்தே மட்டுப்படுத்தப்பட்ட அளவு மண்ணெண்ணெயை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tamil News

Leave a Reply