வடக்கு கிழக்கை அடக்குவதில் அரசாங்கம் குறியாக இருக்கின்றது-சுமந்திரன்

நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட,  வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாமனிதர்  தராகி சிவராம் அவர்களின் 17வது நினைவு நிகழ்வும், நீதி கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tamil News