இரு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான பெரும் பணவியல் கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னேற்றம் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே இலங்கையில் வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.