இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன -சுகாதார அமைச்சு

214 Views

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மற்றுமொரு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இன்று கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையும் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வைத்தியசாலைகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இந்த மருந்துகளை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்கான மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு 3.1 தொன் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இந்தோனேசியா தீர்மானித்துள்ளது.

Tamil News

Leave a Reply