பிரதமர் மகிந்த மரியாதையுடன் பதவி விலக வேண்டும்-அத்துரலியே ரத்ன தேரர்

இலங்கையில் ஒரு சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும்,  குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதால், பிரதமர் மரியாதையுடன் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பிரதமருக்காக பல வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலம் கூட்டுக் குழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமரை நியமிக்குமாறு பரிந்துரைத்து ஜனாதிபதியே கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விபரங்களை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

Tamil News