பரபரப்பான நிலையில் நாடாளுமன்றம் கூடுகின்றது: பெரும்பான்மையை நிரூபிப்பதில் தடுமாறும் அரசாங்கம்

329 Views

பரபரப்பான நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவசரகால சட்டம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று நடைபெறவிருப்பதால், பாராளுமன்றத்தில் என்ன நடைபெறும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது

Tamil News

Leave a Reply