கோட்டா அரசு சாதாரண பெரும்பான்மையை இன்று இழக்கும்: கம்மன்பில எச்சரிக்கை

318 Views

கோட்டா அரசு சாதாரண பெரும்பான்மையை இன்று இழக்கும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் இன்று சாதாரண பெரும்பான்மையையும் (113) இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எதிரணி பக்கம் அமர்வார்கள் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தகவல் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply