நாட்டின் வங்கித்துறை மிகப்பெரும் ஆபத்தில்! ரணில் எச்சரிக்கை

311 Views

நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குழப்பமடைந்து அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வங்கித்துறை மிகப்பெரும் ஆபத்தில் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் அதிகாரத்துவ ஆயுதங்கள் வெவ்வேறு திசை களில் செல்வதால் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்துள்ளது. மத்திய வங்கி போன்ற நிறுவனங்கள் ஒரு திசையில் செல்கின்றன.

ஏனைய நிறுவனங்கள் மற் றொரு திசையில் செல்கின்றன. மேலும், இந்தியாவிடம் இருந்து பெறும் கடன் சில வாரங்களுக்கு மட்டுமே நாட்டை காப்பாற்றும். இலங்கை மண்ணில் ஏற்கனவே எண்ணெய் ஏற்றுமதி உள்ளது. ஆனால் விலைகள் இரட்டிப் பாகலாம். அதிகபட்சமாக ஐந்து முதல் ஆறு வாரங்களுக்கு இந்திய கடன் இலங்கைக்கு உதவும் என்றார்.

Tamil News

Leave a Reply