இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாலத்தீனர்கள் பலி

427 Views

இஸ்ரேல் இராணுவம்

மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் ஐந்து பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஹமாஸ்  போராளிகளுக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அதன்போது இறந்த ஐவரும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

பாலத்தீன தரப்பிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தங்கள் நாட்டு இராணுவத்தினர் இருவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

தங்கள் உறுப்பினர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹமாஸ் அமைப்பு, பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply