ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்- 47 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களான Khost மற்றும் Kunar மீது பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்கள் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் என 47 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த தாக்குதல்களை கண்டித்து ஆப்கான் மக்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் இராணுவம் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதே சமயம், ஆப்கான் மண்ணிலிருந்து பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தும் ஆயுததாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆப்கானை ஆளும் தாலிபான் அரசாங்கத்தை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

“பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த ஆப்கான் மண்ணை எந்த அச்சமுமின்றி தீவிரவாதிகள் சுதந்திரமான பயன்படுத்துகின்றனர்,” என முன்னெப்போதும் சொல்லப்படாத மொழிநடையில் பாகிஸ்தான் தாலிபான் தரப்பிடம் கூறியிருக்கிறது.