தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய உத்தரவு

தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய

தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 13ஆம் திகதி, வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு, இன்று (15), பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, இந்திய மீனவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மூலம், தாங்கள் வேண்டுமென்று, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கவில்லை எனவும் அவர்களின்  இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதியதன் காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் படகு வந்துவிட்டதாகவும் இதனால் தம்மை மன்னித்து விடுதலை செய்யுமாறும்  கோரினர்.

இதனை ஏற்றுக்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம், மீனவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் அரசுடமையாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அறிவித்து அதனை ஓராண்டுக்கு ஒத்தி வைத்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய உத்தரவு