கொரோனாத் தொற்றால் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பலி

189 Views

202107281021160294 Tamil News Tamil News 43654 corona cases acros india SECVPF e1627541587347 கொரோனாத் தொற்றால் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பலி

இலங்கையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த  ஒருவர் கொரோனாத் தொற்றுக் காரணமாக  முதன் முதலாக உயிரிழந்துள்ளார்.

தம்பானேவில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்திலேயே 65 வயது மதிக்கத்தக்க குறித்த  நபர் உயிரிழந்துள்ளார்.

 இந்நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றால்   இடம்பெற்ற முதலாவது பழங் குடியினத்தவர் மரணம் இதுவென   தெரிவிக்கப் படுகின்றது.

கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கையில் இது வரையில் 4821 பேர் உயிரிழந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply