நோர்வேயின் வதிவிடப் பிரதிநிதி மன்னார் பயணம்

183 Views

நோர்வேயின் வதிவிடப் பிரதிநிதி மன்னார் பயணம்

நோர்வேயின் வதிவிடப் பிரதிநிதி மன்னார் பயணம்: இலங்கைக்கான நோர்வேயின் வதிவிடப் பிரதிநிதி Trine Jøranli Eskedal மன்னாருக்கு இன்று (17) பயணம் செய்துள்ளார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமெல்லை சந்தித்த இலங்கைக்கான நோர்வே பிரதிநிதி, அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது, மன்னாருக்கான தனது முதல் பயணம் இதுவென குறிப்பிட்ட நோர்வேயின் வதிவிடப் பிரதிநிதி, மன்னார் தொடர்பில் பல்வேறு விடயங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்ளதாகக் கூறினார்.

Leave a Reply