356 Views
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்திய போதே அவர் இதனை கூறினார்.