அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக புதியவகை XE கொரோனா தொற்று கண்டறியப்பட்டது

புதியவகை XE கொரோனா தொற்று

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல்தடவையாக புதியவகை XE கொரோனா தொற்று நோய்த்தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து அவுஸ்திரேலியா வந்தவரிடமே இந்நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விக்டோரிய சுகாதார அதிகாரிகள் கழிவு நீர் மாதிரிகளில் Omicron வைரஸின் புதிய துணைத் திரிபைக் கண்டறிந்துள்ளனர். Tullamarine பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் BA.4 அல்லது BA.5 துணைத்திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், டென்மார்க், UK மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த துணைத்திரிபு சமீபத்தில் குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்டது.