தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அமுல் – திரையரங்குகளுக்கு அனுமதி

447 Views

Mumbai Corona Cases Reuters தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அமுல் - திரையரங்குகளுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பின் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்படத் தொடங்குகின்றன. நீச்சல் குளங்களில் விளையாட்டுக்கான பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதேபோல் கடற்கரைகள் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப் படுகின்றன. இதுவரை கடற்கரைப் பகுதியில் நடை பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply