மட்டக்களப்பில்  ஒரே நாளில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு

384 Views

corona122 1580869885 மட்டக்களப்பில்  ஒரே நாளில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப் பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், செங்கலடி, ஏறாவூர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply