அமெரிக்காவில் உதயமாகும் புதிய அரசியல் கட்சி

79 Views

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து முன்னேற்றம் (Forward) என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அமெரிக்காவில் ஆரம்பித்துள்ளனர்.

தற்போது சீரழிந்துள்ள அமெரிக்காவின் அரசியல் நிலமைகளை சீர் செய்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதே தமது நோக்கம் என இந்த கட்சியின் இணைத் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அரச தலைவர் வேட்பாளருமான அன்று ஜங் தெரிவித்துள்ளார்.

ஜங் தலைமையிலான கட்சி 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோதும் அது தற்போது பல கட்சிகளுடன் இணைந்து ஒரு முன்னியை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்துவரும் இரு கட்சி அரசியலுக்கு இந்த புதிய கட்சி சவாலாக அமையலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இடமுமில்லை வலமுமமில்லை முன்னோக்கி செல்லுங்கள் என்பதே இந்த கட்சியின் வாசகமாக உள்ளது.

அடுத்த அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் இந்த கட்சியானது தனது பணிகளை 50 மாநிலங்களிலும் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply