புதிய தொற்றுநோய் மீண்டும் விரைவில் தாக்கலாம் – ஐ.நா எச்சரிக்கை

தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்
பில் உலக நாடுகள் கவனம் செலுத்தவேண்டும் அதற்கான நிதியை அவர்கள் ஒதுக்க வேண் டும் இல்லையெனில் கோவிட்-19 போன்ற மிகவும் பயங்கரமான தொற்று நோய் நாளை கூட உலகத்தை மீண்டும் தாக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித் துள்ளது.
உலக நாடுகள் சுகாதார பாது காப்புக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும், பெரும் தொற்று தொடர்பான உடன்பாடுகளை மேற் கொள்ள வேண்டும், அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பான உடன் பாடுகள் நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட வேண்டும். கோவிட்-19 போன்ற பெரும் தொற்று இன்னும் 20 வருடங்க ளில் மீண்டும் நடக்கலாம் இல்லையோல் நாளை கூட அது நடக்கலாம். எனவே நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்றோஸ் கெபிரியசஸ் கடந்த திங்கட்கிழமை(7) தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவிட்-19 பெரும் தொற்று நோயினால் உலக நாடுகளில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருந்தனர். மேலும் 10 றில்லியன் டொலர் கள் பொருளாதார இழப்பும் உலகிற்கு ஏற் பட்டிருந்தது. அது போரை விட அதிக சேதத்தை பொருளாதாரம் மற்றும் சமூக மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு ஒரு றில்லியன் டொலர்களையும், ஐரோப்பிய ஒன்றி
யம் தனது பாதுகாப்புக்கு 800 பில்லியன் டொலர்களையும் ஒதுக்கி வருகின்றது. ஆனால் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு மிகவும் குறைந்த நிதியையே உலக நாடுகள் ஒதுக்குகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.