குடி நீரின்றி தவிக்கும் நாவற்சோலை கிராம மக்கள்

293 Views

நீரின்றி தவிக்கும் நாவற்சோலை கிராம மக்கள்

நீரின்றி தவிக்கும் நாவற்சோலை கிராம மக்கள்: திருகோணமலை_குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி நாவற்சோலை கிராமத்தில் குடி நீர் இன்றி அப் பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த இக் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாளாந்தம் தினக் கூலி தொழிலாளர்களை கொண்ட குடும்பங்களே இங்கு வாழ்ந்து வருகின்ற போதிலும் குடி நீரினை பணம் கொடுத்தே வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.

குடிப்பதற்கான நீரினை உரிய கிராமத்துக்குள் கொண்டு செல்கின்ற விற்பனையாளரிடம் பணம் கொடுத்தே பெற வேண்டியுள்ளது. இதனால் தொடர்ந்தும் பணம் கொடுத்து பெறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தங்கள் கிராமத்துக்கு தேவையான குடி நீர் இணைப்பினை பெற்றுத் தருமாறு அப் பகுதி மக்கள் உரிய உயர் அரச அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply