நைஜீரிய தேவாலயத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு-50 பேர் பலி

196 Views

தேவாலயத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

நைஜீரியாவின் தேவாலயம் ஒன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் ஓண்டோ மாநிலத்தில் உள்ள ஓவோ நகரில் புனித பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஆராதனையின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பில் சிக்கி, சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, வழிபாட்டாளர்கள் மீதான இகடகொடூரமான கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply