மலையக அபிலாஷைகள் ஆவணம் தயாரானது-மனோ கணேசன்

285 Views

மலையக அபிலாஷைகள் ஆவணம்

மலையக அபிலாஷைகள் ஆவணம்: இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம் பெற்றுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்தார்.

தமிகூ பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரது பங்குபற்றலுடன், கொழும்பு மன்டரீனா விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

“இந்த ஆவணம் இலங்கை அரசு, இந்திய அரசு, தமிழக அரசு, பிரித்தானிய அரசு ஆகியவற்றுக்கு சமர்பிக்கப்படும்.

இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகளுக்கும் மேலதிக கலந்துரையாலுக்காக வழங்கப்படும்.“என்றார்.

Leave a Reply