ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவகாரம்: நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனும் யோசனை நிராகரிப்பு

நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனும் யோசனை மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.

நிலையியல் கட்டளையை இடைநிறுத்துவதற்கு ஆதரவாக 68 வாக்குகளும் இடைநிறுத்தக்கூடாது என்பதற்காக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.

இந்த பிரேரரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

Tamil News