சீரற்ற காலநிலையால் 5,600 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

கடந்த சில நாட்களில் சீரற்ற காலநிலையால் 5,600 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,113 குடும்பங்களைச் சேர்ந்த 21,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மொனராகலை, பதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் சீரற்ற காலநிலையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் காலநிலை தொடர்பான சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் மழையுடனான காலநிலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை காலநிலையில் மீண்டும் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.