ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

download 3 1 ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கரீபியன் கடலில் இருக்கும் சிறிய தீவு நாடான  ஹைதியில்(Haiti) இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து  அழிந்துள்ளன.

ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரிலிருந்து மேற்கே 125 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு் நேற்று திடீரென 7.2 புள்ளி ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால், ஏராளமான கட்டிடகள்,வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின.

ஹைதியின் தெற்குப்பகுதி மாநிலத்தில் நிகழ்ந்த இந்த நில நடுக்கத்தில்,  இடிபாடுகளில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் இடிந்துள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன. இன்னும் சேதவிவரங்கள் குறித்து முழுமையானத் தகவல்கள் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று (அந்நாட்டில் நள்ளிரவு) மீண்டும் 3.3 என்ற ரிக்டர் அளவில்  நில நடுக்கம்  ஏற்பட்டதாக  அமெரிக்க நிலவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் லே கேயஸ் நகரின் முன்னாள் மேயரும், நீண்டகாலம்  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான கேப்ரியல் பார்டியூன் உயிரிழந்துள்ளார். இவர் தங்கியிருந்த லீ மான்குயர் விடுதி இடிந்து விழுந்ததால், கேப்ரியல் உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெஸ் கேயாஸ் நகரிலிருந்து 10.5 கிமீ தொலைவில் இருக்கும் எல்லி வாசே எனும் தீவில் இருக்கும் புகழ்பெற்ற தங்கும் விடுதியும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உடனடியாக ஹைதி நாட்டுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், மீட்பு நடவடிக்கையில் உதவவும் அமெரிக்க உதவி நிர்வாக இயக்குநர் சமந்தாவுக்கு உத்தரிவிட்டுள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021