இலங்கையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலி

144 Views

deaths 0 இலங்கையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,096 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டும் இலங்கையில் 161 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்து ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,54,109 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் படிப்படியாக கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.

அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரை தவிர வேறு எந்தவொரு நபருக்கும், மாகாண எல்லைகளை கடந்த 13ம் திகதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. தற்போது, எதிர்வரும் 17ம் திகதி முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த முடியாது என அறிவித்துள்ளது.

மேலும் வரும் 16ம் திகதி முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையில் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply