இந்தியா – சீனா எல்லைக்கு மோடி பயணம்; லடாக்கில் படையினரை சந்திக்கிறார்

லடாக்கில் உள்ள நிமு எனுமிடத்தில் நரேந்திர மோடி தற்போது இருப்பதாகவும் இன்று அதிகாலை அவர் அங்கு சென்றடைந்ததாகவும் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத்தினர், இந்திய விமானப் படையினர் மற்றும் இந்தியா – சீனா இடையிலான எல்லை பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ படையான இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை ஆகியவற்றை சேர்ந்தவர்களுடன் நரேந்திர மோடி தற்பொழுது கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் ஜன்ஸ்கர் பகுதியில் சுமார் 11000 அடி உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

முப்படைகளின் கூட்டுத் தளபதி பிபின் ராவத் மற்றும் இந்திய ராணுவத் தளபதி எம்.எம். நரவனே ஆகியோரும் பிரதமருடன் லடாக் சென்றுள்ளனர்.

சீனா உடனான மோதலில் காயமடைந்த இந்திய ராணுவத்தினரை நரேந்திர மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்கில் உள்ள நிமு எனுமிடத்தில் நரேந்திர மோடி தற்போது இருப்பதாகவும் இன்று அதிகாலை அவர் அங்கு சென்றடைந்ததாகவும் ஏ.என்.ஜ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தினர், இந்திய விமானப் படையினர் மற்றும் இந்தியா – சீனா இடையிலான எல்லை பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ படையான இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை ஆகியவற்றை சேர்ந்தவர்களுடன் நரேந்திரமோதி தற்பொழுது கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் ஜன்ஸ்கர் பகுதியில் சுமார் 11000 அடி உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

முப்படைகளின் கூட்டுத் தளபதி பிபின் ராவத் மற்றும் இந்திய ராணுவத் தளபதி எம்.எம். நரவனே ஆகியோரும் பிரதமருடன் லடாக் சென்றுள்ளனர்.

சீனா உடனான மோதலில் காயமடைந்த இந்திய ராணுவத்தினரை நரேந்திர மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.