உக்ரைனின்: கார்கிவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

446 Views

கார்கிவ் நகரை இலக்கு

கார்கிவ் நகரை இலக்கு வைத்து  ஏவுகணை

உக்ரைனின் இதயமாக கருதப்படும் கார்கிவ் நகரை இலக்கு வைத்து  ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது ரஷ்யா.

உக்ரைனின் மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த நகரம் கருதப்படுகிறது.

போல்ஷிவிக்குகளால் அமைக்கப்பட்ட யுக்ரேனிய சோவியத் சோஷலிச குடியரசின் முதல் தலைநகரம் இதுவாகும்.

இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

இன்று காலையில், பிராந்திய நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே சுதந்திர சதுக்கம் கட்டடத்தை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையை “அப்பட்டமான போர் குற்றம்” என்று அந்த பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஓலே சினேஹுபோவ் கூறியுள்ளார்.

அதே நேரம் உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர், கார்கிவ் சுதந்திர சதுக்கத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply