162 Views
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை மற்றும் பாண்டிச்சேரி இடையே முன்னெடுக்கப்படவுள்ளது.