இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்தராக செயற்படப் போவதில்லை – நிராகரித்தார் சொல்ஹெய்ம்

127 Views

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கத்திற்கும் தமிழ் கட்சிகளிற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படப்போவதில்லை என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் எரிக்சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் எதிர்கட்சி தலைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் இந்த பேச்சுவார்த்தைகள் சூழல் சார்ந்த விடயங்கள் பற்றியே அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எரிக்சொல்ஹெய்ம் மீண்டும் மத்தியஸ்தராக செயற்படவேண்டும் அரசியல் தீர்வை காண்பதற்கு உதவவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களிற்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சொல்ஹெய்ம்  காலநிலை மற்றும் சூழல் விவகாரங்கள் தவிர தனக்கு வேறு ஆணையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆரம்பித்துள்ள அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகளில்  வெளிநாட்டவருக்கு இடமில்லை என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply